தமிழ்நாட்டில் கண்புரை மற்றும் பார்வைக் குறைபாடுகளை அகற்றுவதற்காக சங்கரா கண் அறக்கட்டளையுடன் இணைந்து கூட்டு முயற்சியாக ‘விஷன் சென்டர்’ தொடங்கப்பட்டுள்ளது.
கோவை: டைட்டன் நிறுவனமும் சங்கரா கண் அறக்கட்டளையும் (Sankara Eye Foundation) 9 ஆண்டுகள் வெற்றிகரமாக இணைந்து செயல்பட்டு வந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக சங்கரா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர் வி ரமணி [Dr R V Ramani, Founder and Managing Trustee from Sankara] மற்றும் டைட்டன் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் மற்றும் கார்ப்பரேட் சஸ்டெயின்பிலிட்டி பிரிவுத் தலைவர் என் இ ஸ்ரீதர் [Mr Sridhar N E, AVP & Head of Corporate Sustainability from Titan] ஆகியோர் இடையே 8 ஏப்ரல் 2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்து ஆனது.
பார்வைக் குறைபாடுகளை சரி செய்யும் விஐ (‘VI initiative’) என்ற முன்முயற்சியுடன் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த வகையில் இதுபோன்ற முன்முயற்சி தொடங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். கண் பிரச்சனைகளுக்கான பரிசோதனைகள், கண்கண்ணாடிகள் வழங்குதல் மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது தொடர்பான சேவைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். இந்த கண் பிரச்சினைகள் குறித்து விழி்ப்புணர்வு இல்லாத மக்களைச் சென்றடைந்து சேவை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயனுள்ள கண் பராமரிப்பை வழங்குவதற்காகவும், பயன் பெறும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், விஐ முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வட்டாரமும் (ஊராட்சி ஒன்றியம் – block) கண்புரை மற்றும் பார்வைக் குறைபாடு இல்லாத பகுதி என்பதை உறுதி செய்யும் வகையில் இதில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த முன்முயற்சியின் கீழ், இரு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் அருப்புக்கோட்டை மற்றும் அன்னூர் வட்டாரங்களை விரிவாக உள்ளடக்கி, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்குவதை இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திலும் இந்தப் பணிகளை நிறைவு செய்ய சுமார் 18 மாதங்கள் ஆகும்.
டைட்டன் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியான மகிழ்ச்சியான கண்கள் எனப்படும் “ஹேப்பி ஐய்ஸ்” (Titans CSR Project Happy Eyes – HE) திட்டம், இந்திய கிராமப்புறப் பகுதிகளில் மக்களின் வீடுகளுக்கே சென்று பயனுள்ள கண் சிகிச்சையை வழங்குகிறது.
அதன் தொடர்ச்சியாக மக்கள் கண் சிகிச்சைகளுக்காக அணுகுவதை எளிதாக்கும் வகையில், டைட்டன் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் (Assistant Vice President ஏவிபி) மற்றும் பெருநிறுவன கார்ப்பரேட் சஸ்டெயின்பிலிட்டி பிரிவுத் தலைவர் என் இ ஸ்ரீதர் மற்றும் சங்கரா மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தின் தலைவர் பரத்பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து 2022 ஏப்ரல் 8-ம் தேதி தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பாப்பம்பட்டியில் ஐந்தாவது விஷன் சென்டரை தொடங்கி வைத்தனர்.
சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து கூட்டு செயல்பாடாக இது தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ரானேபென்னூர், தமிழ்நாட்டின் விருத்தாசலம், ஆனைகட்டி மற்றும் ஆம்பூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே நான்கு விஷன் சென்டர்கள் (பார்வை மையங்கள்) வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
இவை உள்ளூர் மக்களுக்கு சிறப்பாகச் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த திட்டம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பார்வைக் குறைபாடுகள் மற்றும் பார்வை இழப்பைத் தடுத்து அவற்றை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘விஷன் சென்டர்’ பரந்த அளவிலான கண் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.
சிறப்பு மருத்துவர்கள் இல்லாத பகுதிகளில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஆதரவு, மக்களைச் சென்றடையும் முகாம்கள், குறைந்த செலவில் கண் சிகிச்சைக்கான வாய்ப்புகள் மற்றும் கிராமப்புற மக்களிடையே கண் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை இந்த விஷன் சென்டர் வழங்குகிறது.
சமூகத்திற்குத் தேவையான அடிப்படையான உயர்தர கண் சிகிச்சையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதை முதன்மையான நோக்கமாக கொண்டு கவனம் செலுத்தும், ஹேப்பி ஐய்ஸ் (மகிழ்ச்சியான கண்கள்) (Happy Eyes) முன்முயற்சியின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் பின் வருமாறு.
கர்நாடகாவில் நன்னா கண்ணு திட்டம் [Project Nanna Kannu in Karnataka]:
பள்ளிக் குழந்தைகளுக்கான ஒரு விரிவான குழந்தைகள் மருத்துவக் கண் பராமரிப்புத் திட்டம் இதுவாகும். அவர்களின் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு சரியான நேரத்தில் தீர்வு மற்றும் சிகிச்சை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சேவையை இது வழங்குகிறது.
கிஃப்ட் ஆஃப் விஷன் திட்டம் [Gift of vision]:
கண் பராமரிப்பு சேவைகளைப் பயன்படுத்துவதில் சமச்சீரற்ற தன்மைக்கு வழிவகுக்கும் தடைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு கிராமப்புற சமூக நலத் திட்டம் இதுவாகும். இது கிராமப்புற பெரியவர்களுக்கு உதவுகிறது. அத்துடன் அவர்களின் பார்வை குறைபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கு கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை இத்திட்டம் வழங்குகிறது.
நடமாடும் கிராமப்புறத் திட்டம் (Mobile Rural Vehicle Project - MRVP):
இந்தத் திட்டம் 19 டிசம்பர் 2019 அன்று டைட்டன் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நகர்ப்புற குடிசைப் பகுதிகள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் தரமான கண் சிகிச்சையை அணுக முடியாதவர்கள் என 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைந்து இந்த திட்டம் அவர்களுக்கு மிகுந்த பயன் அளித்துள்ளது.
சங்கரா கண் அறக்கட்டளையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த விஷன் சென்டர் திறப்பு விழாவின்போது பேசிய டைட்டன் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் மற்றும் பெருநிறுவன கார்ப்பரேட் சஸ்டெயின்பிலிட்டி பிரிவுத் தலைவர் என் இ ஸ்ரீதர் (N E Sridhar, AVP Head of Corporate Sustainability) கூறுகையில்,
“பாப்பம்பட்டியில் கண் சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் 5-வது விஷன் சென்டரை (பார்வை மையம்) அமைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். விஐ (VI) முன்முயற்சி போன்ற தனித்துவமான முயற்சியில் சங்கரா கண் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
இதன் மூலம் முக்கியமான கண் பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளவர்களுக்கு எங்கள் ஆதரவை வழங்க விரும்புகிறோம். அத்துடன் கண் ஆரோக்கியம் மற்றும் கண் பிரச்சினைகளைத் தடுப்பது குறித்து போதுமான விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம்.” என்றார்.
டைட்டன் நிறுவனம் பற்றி….
டைட்டன் நிறுவனம் (முன்பு டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என்று அழைக்கப்பட்டது). தமி்ழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மற்றும் டாடா குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும்.
டைட்டன் வாட்சஸ் (கடிகாரங்கள்) என்ற பெயரில் இது 1987-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. 1994-ம் ஆண்டு டைட்டன் நிறுவனம் நகைப் பிரிவிலும் காலடி எடுத்து வைத்தது. பின்னர் டைட்டன் ஐ பிளஸ் என்ற பெயரில் கண் கண்ணாடிகள் பிரிவிலும் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கியது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் டைட்டன் பல பிரிவுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தியுள்ளது. நறுமணப் பொருட்கள் பிரிவில் ஸ்கின் (SKINN) என்ற பெயரில் நுழைந்துள்ளதுடன் தனீரா (TANEIRA) என்ற ஆடைகள் மற்றும் அலங்காரப் பிரிவைுயும் தொடங்கியுள்ளது.
தற்போது டைட்டன் நிறுவனம் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப கடிகாரங்கள், நகைகள் மற்றும் கண் கண்ணாடிகளை உற்பத்தி செய்து மக்களுக்கு சில்லறை விற்பனையில் வழங்கி வருவதுடன் இதில் முன்னோடி நிறுவனமாகத் திகழந்து வருகிறது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் டைட்டன் நிறுவனம் ரூ.20,600 கோடி வருவாயைப் பெற்றுள்ளது.
டைட்டனைப் பற்றி மேலும் அறிய இணையதள முகவரி:www.titancompany.in
பேஸ்புக்:https://www.facebook.com/TitanCompanyLimited/
டுவிட்டர்:https://twitter.com/TitanCompanyLtd
லிங்க்டு இன்:https://www.linkedin.com/company/titan-industries
இன்ஸ்டாகிராம்:https://www.instagram.com/titancompanyltd/