'பேரனிடமிருந்து பணத்தை மீட்டுத்தாங்க'... கோவையில் கண்ணீர் மல்க மனு கொடுத்த மூதாட்டி...!

கோவையில் பேரன் வங்கி கணக்கிற்கு ஓய்வூதிய பணத்தை அனுப்புவதாகவும், தனக்கு பேரன் பணம் கொடுக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக 80-வயது மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.



கோவை: ஓய்வூதிய பணத்தை பேரன் கொடுக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக 80 வயது மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.



கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சூரியநாராயணன் இவரது மனைவி ராஜம்மாள். சூரியநாராயணன் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தாக தெரிகிறது. இதையடுத்து, தனியாக வசித்து வரும் ராஜம்மாள், சூரியநாராயணன் இறந்த பிறகு அவரது மகன் வழிப் பேரன் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி உள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக எந்த ஓய்வூதிய பணமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜம்மாள் வங்கிக்கு சென்று கேட்டபோது 4 மாதங்களாக அவர் பேரன் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதையறிந்த ராஜம்மாள் பலமுறை பேரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து புகார் அளிக்க இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ராஜம்மாள் கண்ணீர் மல்க தனக்கு நடந்த பிரச்சனைகள் குறித்து விவரித்தார். பீளமேட்டில் தனியாக வசித்து வருவதாகவும், தனது பேரனை சிரமப்பட்டு படிக்க வைத்த நிலையில் இப்போது அவர் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். ஆனாலும் ஓய்வூதியத்தை வழங்காமல் அவரது வங்கி கணக்கை கொடுத்துள்ளதாகவும், இது குறித்து கேட்க வீட்டிற்குப் போனால் மருமகள் விரட்டியடி பதாகத் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக புகார் அளிக்க வர சுமார் 2000 ஆயிரம் வரை ஆட்டோ செலவு ஆவதோடு 80 வயதில் தினமும் தன்னால் அலைய முடியவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...