கோவையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த ஜார்ஜியா நாட்டு இளைஞர் கைது - சென்னை புழல் சிறை அடைப்பு…!

கடந்த 11-ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.


கோவை: சுற்றுலா விசாவில் கோவை வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த ஜார்ஜியா நாட்டு இளைஞரை போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை போத்தனூர் பகுதியில் கடந்த 18ம் தேதி வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் முருகேஷ் தலைமையிலான அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஜார்ஜிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும், இல்லாமல் இருந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் ஜார்ஜியா நாட்டு இளைஞர் குறித்து விசாரித்த போது, ஈஷா மையத்திற்கு வந்த அவர் பின்னர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதும், அவரது பெயர் முர்மேன் மும்லேட்ஸ் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜிய இளைஞர் முர்மேன் மும்லேட்ஸ் குறித்து வெளிநாடு பாஸ்போர்ட் துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த 11-ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...