மக்கள் தொடர்பு முகாம்: மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்..!

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளைப்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.



இந்நிகழ்வில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், பொது மக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மக்களை தேடி அரசின் திட்டங்கள் எல்லாம் செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அதன்படியே இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை இதற்குச் சான்றாக விளங்குகின்றது என்றும், இங்கு நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன்பாக இப்பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்னரே இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய மனுக்களை தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், அதற்கான நலத்திட்டங்களும் இந்த முகாம்களில் வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.

மக்கள் தொடர்பு முகாம் என்பது ஒரு நாள் நடப்பது அல்ல என்றும் ஒரு மாதமாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி பெறப்பட்ட மனுக்களில் 575 பயனாளிகளுக்கு 2 கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது எனவும் கூறினார்.



பின் காரமடை வட்டம் தோட்டக்கலை மலைப்பயிர் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார்.



இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், காரமடை நகராட்சித் தலைவர் உஷா ரமேஷ், காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெகதீசன், பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேந்திரன், வட்டாட்சியர் ரமேஷ், சமூக ஆர்வலர்கள் சண்முகசுந்தரம், கல்யாணசுந்தரம், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...