அரசு பள்ளியில் மாணவியை மதம் மாற்ற முயன்ற ஆசிரியர்? திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்து இளைஞர் முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளியில் மாணவியை மதமாற்ற முயற்சி செய்ததாக குற்றம் சாட்டி, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரக்கூடிய சூழ்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியக்கூடிய தமிழ் ஆசிரியர் ஒருவர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக கூறி நேற்றைய தினம் வடக்கு காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மத மாற்ற முயன்ற பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்து இளைஞர் முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...