முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், கொடநாடு எஸ்டேட் பங்குதாரரான வி.கே.சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளத் தனிப்படை போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, வி.கே சசிகலாவிடம் நாளை தனிப்படை விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டு, சில பொருட்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான கனகராஜ் சேலத்தில் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஐ.ஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைத்து மறு விசாரணை துவங்கி உள்ளது. ஏற்கனவே எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விசி ஆறுக்குட்டி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அனுபவ் ரவி உள்ளிட்ட 200 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், கொடநாடு எஸ்டேட் பங்குதாரரான வி.கே.சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளத் தனிப்படை போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாளை காலை 10 மணி அளவில் சென்னை தி.நகரில் உள்ள சசிகலா வீட்டில்வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தற்போது விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், விகே சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.