கோவையில் பீஸ்ட் படத்தை பார்க்க ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை, விஜய் ரசிகர் ஒருவர் திரையரங்கம் அழைத்துச்சென்று மகிழ்வித்துள்ளார்..!

படம் ஆரம்பித்து திரையில் விஜய்யை பார்த்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் தன்னை மறந்து சந்தோசமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.



கோவை: கோவையில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தை பார்க்க ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை, விஜய் ரசிகர் ஒருவர் திரையரங்கம் அழைத்துச்சென்று மகிழ்வித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுள்ளது. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் பீஸ்ட் படம் பார்க்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த விஜய் ரசிகரும் தன்னார்வலருமான நவீன் ரோஷன் என்பவர் மாற்றுத்திறனாளி இல்லத்தில் வசித்து வரும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை, தனது சொந்த செலவில் அழைத்து வந்து கோவை போத்தனூர் பகுதியில் உள்ள அரசன் திரையரங்கில் பீஸ்ட் படம் பார்க்க வைத்தார்.



படம் ஆரம்பித்து திரையில் விஜய்யை பார்த்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் தன்னை மறந்து சந்தோசமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதுகுறித்து நவீன் ரேசன் கூறும் போது:-

கோவை போத்தனூர் அருகே உள்ள மாற்றுத்திறனாளி இல்லத்தில் இருக்கும், குழந்தைகளில் பெரும்பாலானோர் விஜய் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் பீஸ்ட் படத்தை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டதால் அழைத்து வந்துள்ளேன்.

பொதுவாக திரைப்படம் வெளியாகும்போது 100-அடி உயரத்திற்கு கட்டவுட் வைத்து கொண்டாடுவதை,விட இம்மாதிரி வெளியே செல்ல வாய்ப்பு இல்லாமல், திரையரங்கில் திரைப்படங்களை பார்க்க வாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளைப் படத்திற்கு அழைத்து வருவதை நடிகர் விஜய் விரும்புவார்.

இதேபோல் மீண்டும் அடுத்தப்படத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...