கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த நபரின் மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை ஆபாசமான கருத்துகளுடன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளம்பெண்ணை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை:கோவையில் காதலனின் மனைவி,மகள் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துகளுடன் பதிவிட்ட இளம் பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமணமான நபர் ஒருவரை, திருப்பூர் மாவட்டம் நாதகடயனூர் பகுதியை சேர்ந்த உமாராணி (28). என்ற பெண் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், உமாராணி தனது காதலரின் மனைவி மற்றும் இளம் மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்களுடன் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 35 வயது பெண் மாவட்ட சைபர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில், உமா ராணியை விசாரித்தபோலீசார் அவர் மீது போக்சோ மற்றும் ஐ.டி சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.