கோவை தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம் இரிடியம் உள்ளதாக கூறி ரூ.30-லட்சம் மோசடி செய்த 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம் ரூ.30-லட்சம் மோசடி செய்த 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த மனோகரன் (60). இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அந்த விடுதிக்கு வந்த மர்ம நபர்கள், மனோகரன் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனோகரனிடம், விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் மனோகரனிடம் பேசிய மர்ம நபர்கள் தன்னிடம் இரிடியம் உள்ளதாகக் கூறி பணத்துடன் கோவை வர சொன்னதாகவும், இதை நம்பி வந்த அவரிடம் இரண்டு மர்ம நபர்கள் ஒரு பெட்டியை கொடுத்துவிட்டு அதை 4-மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் இரிடியத்திற்கு சத்தி கிடைக்கும் என கூறி விட்டு பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, 4-மணி நேரம் கழித்து பெட்டியை திறந்து பார்த்த போது அதில் செங்கள் கட்டிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் முருகானந்தம், கண்ணப்பன் உள்ளிட்ட 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.