விளாங்குறிச்சியில் தனியாக பெண்கள் மாலை நேரங்களில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு நிறைந்து காணப்படுகிறது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை:கோவையில் சமூக விரோத செயல்களின் புகலிடமாக விளாங்குறிச்சி மாறிவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது விளாங்குறிச்சி கிராமம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த பகுதி மிக அதிக வளர்ச்சி பெற்றுள்ளது.
தொழில் மட்டுமன்றி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தநூற்றுக்கணக்கான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் விளாங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு பகுதிகள் புதிதாக உருவாகி உள்ளன.
உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர்.
சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்டவற்றை இணைக்கும் முக்கிய சாலையாகவும்மறுபுறம் விமானநிலையம் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்டவற்றை இணைக்கும் பகுதியாக உள்ளதால் விளாங்குறிச்சி பகுதியில் தினமும் காலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து அதிக வாகன போக்குவரத்து காணப்படுகிறது.

சமீபகாலமாக விளாங்குறிச்சி பகுதியில் சட்டவிரோத செயல்கள் மிக அதிக அளவு நடக்க துவங்கி உள்ளன.குறிப்பாகக் கஞ்சா விற்பனை குட்கா விற்பனை மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் மதுபான விற்பனை கடை என பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
விளாங்குறிச்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை தடை செய்யப்பட்ட போதிலும் விளாங்குறிச்சியில் பார்க்குமிடமெல்லாம் அனைத்து கடைகளிலும் மிக சுலபமாக எத்தனை பாக்கெட்டுகள் வேண்டுமானாலும் பெற்றுச் செல்லும் அளவுக்குகுட்கா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
தோப்பு ஒயின்ஸ் டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை:-
விளாங்குறிச்சியில் இரண்டு இடங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது. விளாங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடை திமுகவினரால் நடத்தப்படுகிறது.

அந்த பார் இரவு நேரம் மூடப்படுகிறது. ஆனால் அதிமுக பிரமுகர் நடத்திவரும் தோப்பு டாஸ்மாக் மதுபான கடை மற்றும் பாரில் இருபத்தி நான்கு மணி நேரமும் மது விற்பனை சட்ட விரோதமாக நடந்து வருகிறது. இந்தக் கடை விளாங்குறிச்சி முதல் விநாயகபுரம் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிரோதச் செயல்கள் காரணமாக விளாங்குறிச்சி பகுதிகளில் பள்ளி மாணவியர் பெண்கள் உள்ளிட்டோர் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே சென்று வர மிகுந்த சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தனியாகப் பெண்கள் மாலை நேரங்களில் கூட வெளியே செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு நிறைந்து காணப்படுகிறது.
பெரிய அளவில் சட்ட ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவம் நடப்பதற்கு முன் விளாங்குறிச்சி பகுதியில் நடக்கும் இந்த சட்ட விரோத செயல்களைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.