கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரிடம் போலீஸ் என்று கூறி மர்ம நபர்கள் ரூ.35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கோவை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபரிடம் போலீஸ் என்று கூறி மர்ம நபர்கள் ரூ.35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும்.பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் நேற்று இரவு கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவில் தங்கும் விடுதிக்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் காவல்துறையினர் எனக் கூறி அறையை சோதனை போட்டதாக தெரிகிறது.
அப்போது, மனோகரன் வைத்திருந்த ரூ 35 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனோகரனிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தங்கும் விடுதியில் போலீசார் என்று கூறி ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.