இந்தி மொழிக்கு எதிராக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும், கோவை காந்திபார்க் பகுதியில் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: இந்தி மொழிக்கு எதிராக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும், கோவை காந்திபார்க் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மொழி குறித்து அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையை சீர் குலைக்க கூடாது, மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்க கூடாது, மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு நடத்துகின்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் மேற்கு நகர குழு செயலாளர் பி.சி.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இதில் உரையாற்றிய பத்மநாபன் பேசுகையில், "பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்தியாவில் எந்த மொழியும் இன்னொரு மொழிக்கு குறைந்தது அல்ல", எனவும் தெரிவித்தார்.
ஆர்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.