கோவை அஜ்ஜனூர் பிரிவு அருகில் காரில் வைத்து கஞ்சா விற்பனை - பத்திரிக்கையாளர் அடையாள அட்டையுடன் சுற்றிய இருவர் கைது!

கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே வடவள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, காரை சோதனை போது, காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பி.என்.புதூரை சேர்ந்த சரவணன் (38) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது.



மேலும், பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும், ஆனால், காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வைத்ததுடன், ஆரம்பம் மலர் என்ற வார பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என அடையாள அட்டையை வைத்திருந்ததும், தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...