கோவையில் ட்ரோன் யூனிட் - மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என மாநகர போலீஸ் எதிர்பார்ப்பு….!

ஏற்கனவே மும்பை, டெல்லி, மாநிலங்களில் ட்ரோன் கண்காணிப்பு அமல்படுத்தி உள்ளது. விரைவில் சென்னை மற்றும் கோவைக்கு இந்த டிரோன் யூனிட்டுகள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்துள்ளனர்.


கோவை: சென்னை பெருநகர போலீஸில் யூனிட்டுகள் பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு அதற்காக 3.6 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரினா, முக்கிய கடை வீதிகள் உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த சென்னை பெருநகர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கோரிக்கை வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.3.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். சென்னையில் முக்கியமான 9 இடங்களில் இந்த ட்ரோன் கேமரா கண்காணிப்பை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

இதன்மூலம் முக்கியமான அரசியல் கூட்டங்கள், பொது மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிக்கவும் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை மாநகரில் ட்ரோன் யூனிட்டை பயன்படுத்த மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

வரும் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற உள்ள மானிய கோரிக்கையின் போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக முக்கியமான நிகழ்வுகளை கண்காணிக்க ட்ரோன் கேமரா பயன்படும் என்றும் நேரடியாக காவலர்கள் கண்காணிப்பதைக் காட்டிலும் மிக எளிதாகவும், ட்ரோன் மூலம் கண்காணிக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே மும்பை, டெல்லி, மாநிலங்களில் ட்ரோன் கண்காணிப்பு அமல்படுத்தி உள்ளதால் விரைவில் சென்னை மற்றும் கோவைக்கு இந்த ட்ரோன் யூனிட்டுகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...