மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் வழங்க கோரியும், தகாத வார்த்தைகளால் பேசிய சுகாதார ஆய்வாளருக்கு அறிவுரை வழங்க கோரியும், கோவை மாநகராட்சி ஆணையருக்கு பெண் சுகாதார பணியாளர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி சுகாதார பணியாளர் மஞ்சுளாவுக்கு சம்பள நிலுவை உள்ளதால் அதனை வழங்கக்கோரியும், பெண் தூய்மை பணியாளரை தகாத வார்த்தைகளால் பேசுவது குறித்தும் கோவை மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளார்.
துப்புரவு பணியாளர் மஞ்சுளா கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் பகுதியில், உள்ள டிவிஷன் அலுவலகத்தில் நிரந்தர துப்புரவு பணியாளராக உள்ள மஞ்சுளாவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரையான சம்பளம் வழங்கவில்லை என்று கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த அதாவது;
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள டிவிஷன் அலுவலகத்தில் நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றேன். எனக்கான வேலைகள் அனைத்தும் அங்குள்ள சுகாதார மேற்பார்வையாளர் கூறும் நிலையில் பணிகள் அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றேன்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் துவக்கத்திலிருந்து ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மாவட்ட வருவாய் அலுவலர் இல்ல வளாகத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூறியதால் தற்போது அங்கு பணிபுரிந்து வருகின்றேன்.
நான் வேலை செய்யும் டிவிஷனில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் ரங்கராஜன் தனக்கு ஜனவரி மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை என்றும், இவர் தனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவர் அலுவலகத்தில் தான் செய்யும் தொழிலைக் கேவலமாக பேசுவதுடன் தன்னை பழிவாங்கும் நோக்கில் அனைத்து செயல்களையும் செய்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தன்னை நேரில் வந்து அவரை தனியாகச் சந்திக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
எனவே, சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் ரங்கராஜன் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் உடனடியாக சம்பள பாக்கியை தர வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.