தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கோவையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி..!

இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளிகளில் பேச்சு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தேர்முட்டி பகுதியில் உள்ள துணி வணிகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முன்பே பள்ளிகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



இவர்களுக்கு 11 தலைப்புகள் ( தேசத்தின் ஒளிவிளக்கு அம்பேத்கர், அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, அம்பேத்கரின் வறுமை, அம்பேத்கரும் கல்வியும், அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர், சாதி எதிர்ப்பாளர் அண்ணல் அம்பேத்கர், அம்பேத்கரின் இளமைப்பருவம், இந்தியாவில் அம்பேத்கரின் சாதனைகள், சமூகநீதி அம்பேத்கர், சட்ட மாமேதை அம்பேத்கர், இந்தியாவின் விடிவெள்ளி அம்பேத்கர்) வழங்கப்பட்டன. ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கு தலா 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது.



கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சு போட்டியில், முனைவர் சாந்தி உட்பட 6 அரசு மற்றும் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தனர்.

பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள பேச்சுப் போட்டியில் பங்கேற்பர்கள்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...