ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!

காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததையடுத்து, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும், 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பில், பி.எட்., பட்டம் முடித்தவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல், 10-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில்,

புதிதாக பி.எட்., முடித்தவர்கள் மற்றும் இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள், தகுதி தேர்வு எழுதும் வகையில், தேர்வு அறிவிப்பை, மார்ச், 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச் 14-ல் துவங்கி, ஏப்., 13-ல் முடிந்தது. இதில், 4.50 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றதால், 'சர்வர்' முடங்கியது.அதனால், ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, விண்ணப்பிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்; ஆனால், நீட்டிக்கப்படவில்லை.

தேர்வுக்கான பாடத்திட்ட விபரங்கள் மட்டும், வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பின், தேர்வுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நேற்று முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா அறிவித்துள்ளார்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...