சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு நடிகர் மாதவன், தமன்னா, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு!

சத்குரு தொடங்கியுள்ள "மண்‌ காப்போம்‌" இயக்கத்திற்கு சினிமா, விளையாட்டு, இசை என பல்வேறு துறை பிரபலங்களிடம்‌ இருந்து ஆதரவு பெருகி வருகிறது.


கோவை: சத்குரு தொடங்கியுள்ள "மண்‌ காப்போம்‌" இயக்கத்திற்கு சினிமா, விளையாட்டு, இசை என பல்வேறு துறை பிரபலங்களிடம்‌ இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

அதன்படி, இந்திய திரை துறையில்‌ இருந்து பிரபல நடிகர்கள்‌ மாதவன்‌, அஜய்‌ தேவ்கான்‌, பிரேம்‌ சோப்ரா, நடிகைகள் தமன்னா, மவுனி ராய்‌, ஜூஹி சாவ்லா, ஷில்பா ஷெட்டி, மனிஷா கொய்ராலா, கிரிக்கெட்‌ துறையில்‌ இருந்து ஹர்பஜன்‌ சிங்‌, ஏ.பி.டி விலியர்ஸ்‌, மேத்தீவ்‌ ஹைடன்‌, விவியன்‌ ரிச்சர்ட்ஸ்‌, இசை துறையில்‌ இருந்து பாடகர்கள்‌ சோனு நிகம்‌, ஷ்ரேயா கோஷல்‌, தில்ஜித்‌ தோஷந்த்‌, மலுமா உள்ளிட்ட பலர்‌ மண்‌ காப்போம்‌ இயக்கத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்‌.

இது தொடர்பாக, நடிகர்‌ மாதவன்‌ தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள வீடியோவில்‌, “உலக பொருளாதார கூட்டமைப்பின்‌ தகவலின்படி, உலக மக்கள்‌ தொகையில்‌ 60 சதவீதம்‌ பேர்‌ ஏதோ ஒரு விதமான ஊட்டச்சத்து குறைபாட்டால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. பொருளாதாரத்தில்‌ சற்று நல்ல நிலையில்‌ இருக்கும்‌ மக்கள்‌ கூட ஊட்டச்சத்து குறைபாட்டால்‌ பாதிக்கப்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள்‌ கண்டறிந்துள்ளனர்‌.

உங்களுடைய வயிறு நிரம்பியுள்ளதால்‌, அதை நீங்கள்‌ உணரவில்லை. ஆனால்‌, உங்களுடைய உடல்‌ ஊட்டச்சத்து குறைபாட்டால்‌ பாதிப்புக்கு உள்ளாகிறது. நமது மண்ணே அழிந்து வருவதால்‌, நாம்‌ உண்ணும்‌ உணவில்‌ அத்தியாவசியமான சத்துக்கள்‌ இல்லாமல்‌ போகிறது. மண்ணை வளமாக வைத்து கொள்ளாவிட்டால்‌, நாமும்‌, நமக்கு அடுத்து வரும்‌ சந்ததியினரும்‌ ஆரோக்கியமாக இருக்க முடியாது.

எனவே, இது மண்ணை காப்பதற்கான நேரம்‌. மண்‌ வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான, நிலையான பூமியை உருவாக்கும்‌ இம்முயற்சியில்‌ என்னுடன்‌ இணையுங்கள்‌”, என தெரிவித்துள்ளார்‌.

சத்குருவுடன் கலந்துரையாடிய வீடியோவை தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ வெளியிட்டுள்ள கிரிக்கெட்‌ வீரர்‌ ஹர்பஜன்‌ சிங்‌, “மண்‌ காப்போம்‌", இயக்கத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு சத்குரு பைக்கில்‌ பயணித்து வருகிறார்‌. இந்த மாபெரும்‌ திட்டத்தை கையில்‌ எடுத்துள்ள அவருக்கு எனது பாராட்டுக்கள்‌. வாருங்கள்‌, நாம்‌ அனைவரும்‌ இவ்வியக்கத்தில்‌ பங்கெடுப்போம்‌” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகை தமன்னா தனது ட்விட்டர்‌ பக்கத்தில்‌ , “நான்‌ இந்த இயக்கத்தின்‌ மீது உண்மையான நம்பிக்கை கொண்டுள்ளேன்‌. எதிர்கால தலைமுறைக்காக மண்‌ வளத்தை காக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. இது தொடர்பான நம்முடைய உரையாடல்‌ ஆழ்ந்த அர்த்தம்‌ மிகுந்ததாக உள்ளது. நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்தால்‌ மண்‌ வளத்தை பாதுகாக்கலாம்‌” என பதிவிட்டுள்ளார்‌.

இதே போன்று, மற்ற பிரபலங்களும்‌ சமூக வலைதளங்கள்‌ மூலம்‌ தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்‌. இதற்கு சத்குருவும்‌ அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில்‌ பதிவுகளை வெளியிட்டுள்ளார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...