2 ஆண்டுகளுக்கு பின் கோவை விமான நிலையத்தில் தினமும் 22 விமானங்கள் இயக்கம்!

கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் தினந்தோறும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.


கோவை: கோவை விமான நிலையம் மூலம் கோவை உள்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும், 30 லட்சம் பேர் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவையை பொறுத்தவரை, தினமும் குறைந்தபட்சம் 33 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மே மாதங்களில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த அளவுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலால் விமான சேவை மோசமடைந்தது.

தற்போது, கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்ததையடுத்து, விமான சேவை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்த சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, கோவை விமான நிலையத்தில், ரன்வே சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் தினமும் 22 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச போக்குவரத்து பிரிவில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மற்றும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கிவையில் இருந்து விமான சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...