கோவையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

டீசல், சுங்கக் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சங்கங்களின கூட்டமைப்பு சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



டீசல் விலை, சுங்கக் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், வாகன புதுப்பித்தல் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், வாகன காப்பீடு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 15 லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்புகளைச் சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



பல்வேறு விதமான கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே, அவற்றை ரத்து செய்து லாரி தொழிலை நம்பியுள்ள அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...