கோவை சேரன் மாநகரில் கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய கட்டிடத்தில் நியாய விலைக்கடை விரைவில் திறப்பு!

சேரன் மாநகர் பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் நியாய விலைக்கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து, தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.


கோவை: கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன் மாநகர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி. இங்கு ஏ,பி,சி என மூன்று பிரிவுகளின் கீழ் 568 தனி வீடுகள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், சேரன் மாநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் தற்போது இரண்டாவது பஸ் ஸ்டாப் அருகே சிறிய கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் தான் தங்களுக்கு தேவையான பொருட்களை மாதந்தோறும் பெற்று வருகின்றனர்.

இடவசதி மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும், என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல் பஸ் ஸ்டாப் அருகே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் நியாய விலைக்கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து, தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.



இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு: நியாய விலைக்கடைக்கு கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

இந்த நியாய விலைக்கடையில் அதிக இடவசதி மற்றும் கழிப்பறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டிடத்தில் செயல்பட உள்ள நியாய விலைக்கடை வளாகம், பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...