கோவையில் மனித - யானை முரண்பாடுகள் - விவசாயிகளிடம், வனத்துறையினர் கருத்துக்கேட்பு கூட்டம்!

கோவை வனக் கோட்டத்தில், வன உயிரினங்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறித்து தமிழக அரசு அமைத்துள்ள குழு சார்பில் இன்று விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வன உயிரினங்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய தமிழக குழு ஒன்றை அமைத்துள்ளது.



அந்த குழு சார்பில் விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் இன்று கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு, குழுவின் தலைவரும், கூடுதல் தலைமை வன பாதுகாவலர் ஐ அன்வர்தீன், வன பாதுகாவலர் பத்மா சமர்த்தா மற்றும் குழுவின் உறுப்பினரான "ஓசை" சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன், கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விவசாய சங்கத் தலைவர் கந்தசாமி, தற்போது வன விலங்குகள் ஊருக்குள் வருவது அதிகமாகியுள்ளது. குறிப்பாக, காட்டு பன்றிகள் அளவுக்கு அதிகமாக குடியிருப்பு பகுதியில் உலா வருவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை, சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும்.

விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சிக்கி இறந்ததால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உள்ள வன விலங்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு, மின்வேலியில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழந்தால், அதனை விபத்தாக கணக்கிட்டு, விவசாயிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் ஊருக்குள் புகும் யானைகளை விரட்ட போதியளவு வனப் பணியாளர்கள் இல்லை. அதே போல், யானை தாக்கி உயிரிழந்தால் அந்த குடும்பத்திற்கு வழங்கப்படும் 4 லட்சம் ரூபாய் நிதி உதவி போதுமானது அல்ல. அதனை உயர்த்தி வழங்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.



மேலும், தடாகம் பள்ளத்தாக்கில் மண் எடுப்பதற்கு தடை உள்ளதால் அந்த பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவும் இந்த தடையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...