வால்பாறையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: அஞ்சலி செலுத்திய கோவை மாவட்ட ஆட்சியர்..!

இளைஞரின் உடல் உறுப்பு தானம் குறித்து தகவல் அறிந்த ஆட்சியர் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஹரிஹரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



கோவை: வால்பாறையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர்.

வால்பாறை மூடிஸ் நகரை சேர்ந்த ஹரிஹரன்(23) கடந்த 16-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் காட்டு மாடு குறுக்கே வந்ததன் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 17-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்குக் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அறிவுறுத்தலின்படி மூளை அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருத்துவர், இருதய மருத்துவ, தீவிர சிகிச்சை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ஹரிஹரனின் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து எடுத்த கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் சம்மதத்துடன் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

அதன்படி ஹரிஹரனின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனை டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்குத் தானமாகவும் மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கு அளிக்கப்பட உள்ளதாகவும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட உள்ளதாகவும், ஹரிஹரனின் இரண்டு கண்களும் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இருவருக்குத் தானமாக வழங்கப்பட உள்ளதாகவும், மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இளைஞரின் உடல் உறுப்பு தானம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஹரிஹரனின் தாயார் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததற்கு நன்றியும் தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து ஹரிஹரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.



இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா இதர மருத்துவர்கள் உடனிருந்தனர்.



அதனை அடுத்து அவரது உடலானது அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளைஞரின் உறவினர்கள் முக்கியமாக வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மிகவும் தாமதமாகும் அளிக்கப்படுவதாகவும், தகுந்த முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.



மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...