சோமனூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற மதுரை இளைஞர் கைது: 25 கிலோ கஞ்சா பறிமுதல்….!

கோவை சோமனூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற மதுரையைச் சேர்ந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 25.65 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் “கஞ்சா தடுப்பு வேட்டை-2.0” என்ற பெயரில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மேற்பார்வையில் தனிப் படை அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோமனூர் நொய்யல் பாலத்தின் அருகே காவல் ஆய்வாளர், ராஜதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, அவரை சோதனை செய்த போலீசார், அவரிடம் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த முருகசாமி (33) என்பதும், அவர் சில்லறை விற்பனைக்கு கஞ்சாவை கோவைக்கு எடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.



இதையடுத்து, முருகசாயை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 25.650 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு 25.650 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மேலும், கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவோர் பற்றி பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறை எண் - 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் - 77081-00100 எண்களை போலீசார் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...