பா.ஜ.க ஸ்தாபன தினம்: கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாத பூஜை மற்றும் அன்னதானம் வழங்கல்..!

பா.ஜ.கவின் 42-ஆம் ஆண்டின் ஸ்தாபன விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விழா இன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் 42-ஆம் ஆண்டின் ஸ்தாபன விழா கொண்டாடப்பட்டது.



பாரதிய ஜனதா கட்சி தனது 42-ஆம் ஆண்டு ஸ்தாபன விழாவை கொண்டாடும் வகையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் பணிபுரியும் வார்டுகளுக்கு நூறுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் என அனைத்து தூய்மை பணியாளர்களையும் கௌரவிக்கும் விதமாக தூய்மை பணியாளர்களுக்குப் பாத பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



அதன் ஒரு பகுதியாக குனியம்புத்தூரில் 150-தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாத பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியினை குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 17-பகுதிகளில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்று வருகின்றது. அனைத்து வார்டுகளிலும் வேலை செய்யும் சுமார் 100-தூய்மை பணியாளர்களை அவர்கள் செய்யும் பணியின் சிறப்பை பறைசாற்றும் வண்ணம் பாரதிய ஜனதா கட்சியின் 42-ஆம் ஆண்டின் ஸ்தாபன விழாவை கொண்டாடும் நாளில் இந்தநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...