'அபராதம் செலுத்தாமல் இருந்தால் அவ்ளோ தான்'..! கோவையில் ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த கோரி சிஐடியூ ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்..!

எப்.சி தாமதமானால் 10-நாட்களுக்கு 50-ரூபாய் என இருந்த அபராதத்தை நாளொன்றுக்கு 50-ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதால், ஆட்டோ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.



கோவை: ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த கோரி வடக்கு போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட சிஐடியூ ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து சட்டங்களை மறுசீரமைப்பு செய்ததைக் கண்டித்து, நாடு முழுவதும் தொழிலாளர் நலச்சங்கங்கள் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாகக் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சிஐடியுவின் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



போராட்டத்தின் போது, ஆன்லைன் மூலம் ஆட்டோ ஓட்டுனர்கள் சிறு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது எனவும் எப்.சி செலானுக்கு 650 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் என 100 மடங்கு கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் எப்.சி தாமதமானால் 10 நாட்களுக்கு 50 ரூபாய் என இருந்த அபராதத்தை நாளொன்றுக்கு 50 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதால், ஆட்டோ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.



முற்றுகையில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...