இந்த திட்டம் தேவையற்ற திட்டம், இருக்கின்ற நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தி, தேவையான இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டினாலே போதுமானதாக இருக்கும் என கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் தெரிவித்தார்.
கோவை: பசுமைவழிச் சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மண்டல விவசாயிகள் கூட்டமைப்பினர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை முதல் கரூர் வரை ஆறு வழி பசுமைவழி சாலை அமைத்திட மத்திய மாநில அரசுகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக அவ்வழியில் உள்ள பல்வேறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நிலங்கள் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட உள்ளன.

இதனால் சுமார் 3000 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்து வந்த நிலையில் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மண்டல விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பசுமை வழி சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் முருகசாமி, கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உள்பட கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் மற்றும் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பசுமை வழிச் சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் செய்தியாளர்களைச் சந்தித்த கொங்கு மண்டல விவசாயிகள் நலச்சங்க தலைவர் முருகசாமி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் இந்த பசுமை வழி சாலை திட்டத்தினால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு கிணறுகள் எடுக்கப்படும் சூழலும் உள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த திட்டம் தேவையற்ற திட்டம் என தெரிவித்த அவர் இருக்கின்ற நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தி, தேவையான இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டினாலே போதுமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
கடந்த ஆட்சியிலிருந்தே இதுகுறித்த பல்வேறு கோரிக்கைகள் அப்போது இருந்த முதல்வர் இடத்திலும் தெரிவிக்கப்பட்டு வந்ததாகவும், இது குறித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த பசுமை வழிச் சாலைகள் வரும் நிலங்களுக்குப் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என 3A நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு வங்கிகளில் கடன் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே உடனடியாக அந்த நோட்டீசை திரும்பப் பெற வேண்டும் எனவும் பசுமைவழி திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் நெடுஞ்சாலைத்துறையினர் அந்த சாலைகளை சர்வே செய்யவே இல்லை எனவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்தத் திட்டத்தால் கரூர்- கோவைக்கு 6 கிலோமீட்டர் தூரம் மட்டுமே குறையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் வெறும் 6 கிமீக்காக பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை அழிப்பது என்பதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
அன்னூர் முதல் சக்தி வரை புதிய பைபாஸ் ரோடு போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருவதாகக் கூறிய அவர் அவ்வழிகளில் புதிய மேம்பாலங்கள் கட்டினாலேயே போதுமானது என தெரிவித்தார். இது குறித்து கேள்வி கேட்டால் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்பதாக அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் கூறினார்.
ஒவ்வொரு முறையும் விவசாயிகளே அவர்களது நிலத்தை அரசுக்கு வழங்குவதாகவும், இது எவ்வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார்?. எனவே கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் இருக்கின்ற சாலையை விரிவுபடுத்தியும் மேம்பாலங்கள் அமைத்தும் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.