'கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு' - அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை…!

அனுபவ் ரவி தன்னிடம் விசாரணை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச் சொல்லும் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டு, சில பொருட்கள் திருடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டியிடம்போலீசார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அதிமுக அம்மா பேரவை கோவை மாவட்ட இணைச்செயலாளர் அனுபவம் ரவியிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடநாடு கொலை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறுதியாக அனுபவ் ரவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அதன் அடிப்படையிலேயே இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஏற்கனவே அனுபவ் ரவி தன்னிடம் விசாரணை மேற்கொள்ள கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...