இந்த 'சாதி சான்றிதழ்' வேண்டாங்க... நகலை கிழித்து எறிந்து கோவையில் தமிழ்நாடு வண்ணார் பேரவை போராட்டம்..!

வண்ணார் சமுதாயத்திற்கு மட்டும் சலவை தொழிலாளி என்ற தொழிலை மையப்படுத்தி "இந்து வண்ணார் சலவை தொழிலாளி" என்ற சாதி சான்றிதழை வழங்குவதாகவும், அதனை "இந்து வண்ணார்" என மாற்றக் கோரியும் இந்த போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது.


கோவை: வண்ணார் என்ற சாதிசான்றிதழை மட்டும் வழங்கிட வலியுறுத்தி சாதிச் சான்றிதழை கிழித்தெறியும் போராட்டத்தை மேற்கொண்ட தமிழ்நாடு வண்ணார் பேரவையினர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வண்ணார் பேரவை அமைப்பினர் சார்பில் தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சியினர் சாதி சான்றிதழை கிழித்தெறியும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

வண்ணார் சமுதாயத்திற்கு மட்டும் சலவை தொழிலாளி என்ற தொழிலை மையப்படுத்தி "இந்து வண்ணார் சலவை தொழிலாளி" என்ற சாதி சான்றிதழைவழங்குவதாகவும்,அதனை "இந்து வண்ணார்" என மாற்றக் கோரியும் இந்த போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது.



தமிழ்நாடு வண்ணார் பேரவையின் தலைவர் மணி பாபா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

போராட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர், பிற சாதியினர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் போது அவர்கள் சாதி பெயரை மட்டும் குறிப்பிடுகின்றனர் எனவும் ஆனால் வண்ணார் சாதியினருக்கு மட்டும் அவர்களது தொழில் பெயரைக் குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல எனவும், தற்பொழுது இந்த சாதியினரில் பலரும் நன்கு படித்து பல்வேறு உயர் பதவிகளில் இருக்கும் பொழுது இவ்வாறு அவர்களது தொழிலை குறிப்பிடுவது முறையாக இருக்காது என தெரிவித்தார். எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து அவர்களது தொழில் பெயரை சாதி சான்றிதழில் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.



இந்த போராட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு அவர்களது சாதி சான்றிதழ் நகல்கள் கிழித்தெறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். சாலை மறியலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...