ஏப்ரல் 30ம் தேதி தார் சட்டி ஏந்தி இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் - கோவையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிவிப்பு.

நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு குறித்தான பிரச்சார பயணம் கூட்டம் இன்று கோவை சுந்தராபுரத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.


கோவை: தமிழகத்தில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு குறித்தான பிரச்சார பயணம் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று கோவை சுந்தராபுரத்தில் திராவிட கழகம் சார்பில் பிரச்சாரப் பயண விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில், திராவிட கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர்,

பிரதமர் மோடிவிலைவாசியை குறைப்போம், 15 லட்சம் கொடுப்போம் எனக் கூறினார், ஆனால், மாறாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. டீ விலை கூட ல 15 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது தான் மோடி செய்த சாதனை. தேர்தல் வரும் போது மட்டும் விலையேற்றம் இருக்காது. எனவே, அடுத்த தேர்தல் எப்போது வரும் என வடமாநில மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

பா.ஜ.க மட்டுமே நீட் தேர்வை ஆதரிக்கின்றது. வேறு கட்சிகள் எதுவும் ஆதரிக்கவில்லை.

திமுக சொன்னதை செய்யும் இயக்கம், நீட் தேர்வு விவகாரத்தில், திமுகவெறும் மசோதாவை தாக்கல் செய்யவில்லை. ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு மக்களின் கருத்துகளை ஆய்வு செய்து நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை அறிக்கையாக கொடுத்துள்ளனர். ஆனால், கடந்த முறை ஆட்சியில் இருந்த அதிமுக இது போன்று செய்யவில்லை.

2017 ல் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் 12% வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், நீட் தேர்வு வந்த பின்னர், தமிழ் வழி படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ளனர். அனைவரும் படியுங்கள் என்பது தான் திராவிட மாடல். படிக்காதீர்கள் என்பது தான் ஆரிய மாடல். 

7.5% இடஒதுக்கீடு கொடுப்பது கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்றது. முன்பு 61 சதவீதமாக இருந்தது. இப்போது, அது 50 சதவீதமாக குறைந்துள்ளது. தேசிய கல்வி கொள்கை என்பது அசல் மனோ தர்மம், 100 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ படிப்பிற்கு சேர சமஸ்கிருதம் தெரிந்து இருக்க வேண்டும் என இருந்தது, அதை ஒழித்தது திராவிட இயக்கம். இன்று நீட் தேர்வு என்று அதை கொண்டு வந்திருக்கின்றனர்.

நாடு முழுவதும் ஓரே தேர்வு, ஓரே கலாச்சாரம், ஓரே மொழி என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. ஓரே சாதி என்று ஏன் அறிவிக்கவில்லை?.3 ம் வகுப்பு, 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு,10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு என பல தேர்வுகளை தாண்டினாலும்மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை. இதனை தட்டிகேட்க கூடிய ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. 

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கொண்டு வருவோம் என்று அமித்ஷா சொல்கின்றார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் கொண்டு வர பார்க்கின்றனர், இந்திக்கு எதிராக தார் சட்டியை ஏந்தி போராடிய இயக்கம் திராவிட இயக்கம். திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் இந்த பிரச்சார பயணம் நிறைவடைந்த பின்னர்,

ஏப்ரல் 30 ம் தேதி மிகப்பெரிய அளவில் தார் சட்டி எடுத்து இந்தி எழுத்துகளைஅழிக்கும் போராட்டம் நடத்தப்படும்.இந்த அறிவிப்பை கோவையில் இருந்து வெளியிடுகிறேன். 

குலக்கல்வி திட்டத்தை விட மோசமாக நிலையை ஓன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டு வருகின்றனர். போராட்டத்தை தொடர வேண்டிய நிலை இருக்கின்றது.முதல்வர் ஸ்டாலின் இருக்கின்றார், நாங்கள் இருக்கின்றோம்போராடுவோம், என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கோவை துணை மேயர் வெற்றி செல்வன், திமுக நிர்வாகிகள் -- முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக், மருதமலை சேனாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...