கோவையில் நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு கூட்டம்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கவன ஈர்ப்பு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றது. அப்போது, போது விநியோக துறையை தனி துறையாக அறிவிக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கவன ஈர்ப்பு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பல்வேறு துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் பொது விநியோக துறை ஒரு துறையின் கீழ் செயல்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை அமல்படுத்தி, ஒரு துறை என்பதற்கு பதிலாகதனித்துறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு அறிவித்தால் இந்தியாவிலேயே இந்த திட்டம் சிறப்பு மிக்க திட்டமாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், பி.ஓ.எஸ். என்று சொல்லக்கூடிய விற்பனை முனையம் அமைக்கப்பட வேண்டும் என்றும், மோடம் வழங்கப்பட்டு இணைய சேவை மேம்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக ரேசனுக்கு தனி துறை, அரசு ஊழியர்களுக்கு வழங்கிய 17 சதவீதவ அகவிலைப்படியை நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும், ரேசனுக்கு வழங்கப்படும் பொருட்களை சரியான அளவில், சரியான எடையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தபணியாளர்கள் பலர்கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...