உலக ஓவிய தினத்தை முன்னிட்டு, கோவையில் சிறார்களுக்கு ஓவிய பயிற்சி முகாம்!

கோவை தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற்றது.


கோவை: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி உலக ஓவிய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஓவியப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்த ஓவிய பயிற்சி முகாம் இன்று கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடத்தப்படும் என்ற அறிவிப்பை,கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 முதல் 16 வயது உள்ள சிறுவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் சிறந்த ஓவியர்கள் கலந்துகொண்டு ஓவியம் முறைகள் குறித்து செயல்முறை விளக்கங்களையும், பயிற்சிகளையும் அளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு கோவை ஜவஹர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலரை 9942147516 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...