"இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" - கோவையில் நூல் அறிமுக நிகழ்வு..!

தந்தை பெரியார் பற்றி எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" நூல் அறிமுக நிகழ்ச்சி, சமூக நீதி பேரவை சார்பில் கோவை மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது.



கோவை: கோவை மாநகராட்சி கலையரங்கில் எழுத்தாளர் ப.திருமாவேலன், தந்தை பெரியார் பற்றி எழுதிய"இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற்றது.

சமூக நீதி பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், திமுக துணை பொது செயலாளர் மற்றும் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், எம். பி, ஆ .ராசா, நடிகர் சத்யராஜ், தந்தை பெரியார் திராவிடக் கழக, பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், எழுத்தாளர் பாமரன், புலவர் செந்தலை கவுதமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திமுக துணைப் பொதுச் செயலாளர், ஆ.இராசா: தத்துவங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு நூற்றாண்டு காலங்கள் ஆகும். ஆனால், தான் வாழ்ந்த காலத்திலேயே ஒரு தத்துவத்தை முன்வைத்து, அது ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததை பார்த்த ஒரே தலைவர் பெரியார் தான் என்று அண்ணா சொல்லி இருக்கிறார். பெரியார் ஒரு தத்துவம். அவரை சிலர் மொழியில் அடக்க பார்க்கிறார்கள்.

எனக்கு மொழிப்பற்று, நாட்டுப்பற்று, தேசப்பற்று கிடையாது, மனிதபற்று தான் இருக்கிறது எனக் கூறியவர், பெரியார். பெரிய சாதி எனும் கட்டுமானத்தை உடைத்து எளிமையாக தாழ்ந்த ஜாதிகாரராக வாழ்ந்தவர்.

தமிழன் என்று கூறினால், அக்கிரகாரத்தில் இருப்பவனும் உள்ளே வருவான், எனவே அதற்கு வேலி கட்டவே திராவிடன் என்ற பெயரை பெரியார் பயன்படுத்தினார்.

அம்பேத்கர் புத்தகத்தை தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை உடனடியாக முதல்வர் நிறைவேற்றினார். அம்பேத்கரை வளைக்க வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் பார்க்கின்றனர். பெரியார் என்ற நெருப்பை அவர்களால் பொட்டலம் கட்ட முடியவில்லை. இன்று இருக்கும் எந்த கடவுளும் இந்து மதத்தின் கடவுள் அல்ல", என்று எம். பி. ஆ. ராசா பேசினார்.



நடிகர் சத்யராஜ் பேசுகையில்: "எனக்கு புரட்சி தமிழன் என்ற பட்டம் பொருந்தாது. "இன முரசு" என்ற பட்டம் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கும். பெரியார், பெரும் படையை உருவாக்கி வைத்துள்ளார். தமிழ் சமூகத்திற்கு பயன்படும் வகையில் திருமாவேலன் இந்த நூலை எழுதி உள்ளார். பல்வேறு உதாரணங்களுடன் எழுதியுள்ள இந்த நூல், அனைவரிடமும் இருக்க வேண்டும்.

தமிழக முதல்வர், 21 இந்திய மொழியில் பெரியாரின் சிந்ததைகளின் தொகுப்பு மொழி பெயர்க்க்கப்படும் என்று அறிவித்துள்ளார். பெரியாரின் சிந்தனைகள் உலக மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். அப்படி செய்தால் உலகத்தார் பெரியாரை போற்றி எழுதுவர்.

பெரியார் தத்துவங்கள் மனித மென்மைக்கானது. அவர் சிந்தனைகள் உலக மக்களுக்கானது. பெரியார் தமிழ்நாட்டில் இருந்ததால், தமிழர்களிடையே அவர் சிந்தனை பெரிதும் பரவியது.பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை மீது பிரச்சினை இல்லை. ஆனால், சாதி, மதம் தான் கடவுள் மறுப்பை கொண்டு வர செய்தது. சினிமாவில் பெரியார் போன்று நடிப்பதே கடினமாக இருந்தது, அப்படியானால், பெரியார் போல் வாழ்வது எவ்வளவு கடினம்.

பெரியார், மிகப்பெரிய பணக்காரர், மனிதத்திற்காகவே தனது வாழ்நாள் முழுதும் பாடுபட்டார்.

தற்போது, "திராவிட மாடல்" என்ற சொல்லை, சொல்லவே மிக பெருமையாக உள்ளது. யாராலும் அசைக்க முடியாதவர் பெரியார். மூட நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம் போன்றவை மனிதனுக்குமன விலங்கை (மன உளைச்சல்) ஏற்படுத்துகிறது. எனவே, பெரியார் ஒரு மனநல வைத்தியரும் கூட. தற்போதைய, இளைஞர்கள் பலர் பணி சுமை மற்றும் மூட நம்பிக்கைகளில் இருந்து வெளிவர பெரியாரை படிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.



தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில்: 1938ல் இருந்து இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. அதனை தொடங்கியவர் பெரியார். மலைமறையடிகளார், சோமசுந்தர பாரதியார், திரு விக ஆகியோர் மூலம்சிறை சென்றவர், பெரியார்.

திரைப்பட துறையை எடுத்து கொண்டால் ஒடிசா, மராத்தியம் ஆகிய மாநிலங்களில், சூப்பர் ஸ்டார் யார் என கேட்டால் அவர்களால் கூற முடியாது.ஏனென்றால், அங்கெல்லாம் இந்தி மொழி நுழைந்து விட்டது.

அமித்ஷா, இந்தி தான் இணைப்பு மொழி எனக் கூறியதில் சூட்சுமம் உள்ளது. இந்தியா முழுவதும் தமிழன் வரக்கூடாது என்ற நோக்குடன் தான், இந்தி வர வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறார். அதனை நாம் எதிர்க்கின்ற போது, அங்குள்ள மக்கள் நம்மை வெறுக்க தொடங்குவர். இதற்கு தான் அமித்ஷா அவ்வாறு செய்து வருகிறார். 

பெரியார், எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வரவில்லை என்றால், தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் (தமிழ் டைப்பிங்யில் எழுத்துகள் எழுதுவதில் சிரமம்) பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும். தனது வாழ்நாளில் தனி தமிழ்நாடு, வடவர் எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர் பெரியார். மேலும், திருவள்ளுவர் கூறியது போல நன்றியை எதிர்ப்பார்க்காதவர் பெரியார், தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தான் திராவிட மாடல்...! சாதியை பார்க்க மாட்டேன் சாதியை வளர்க்க மாட்டேன் என உறுதி மொழி ஏற்க வைத்தது திராவிட மாடல்.

இவ்வாறு, தமிழுக்காக பெரியார் செய்த பல செயல்களை நூலாசிரியர் திருமாவேலன், இந்த நூலில் சொல்லி இருக்கிறார். இந்த நூலை அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்" என்று கு. இராமகிருட்டிணன் கேட்டுக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, டோக்கன் பெற்றவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திராவிடக் கட்சியினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் திமுகவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...