உடுமலைப்பேட்டையில் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை - போக்குவரத்து பாதிப்பு!

மூணாறு அருகே, உடுமலைப்பேட்டை ரோட்டில், காட்டு யானை நின்றதால், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருப்பூர்:கேரளா மாநிலம் மூணாறு அருகே உடுமலைப்பேட்டை ரோட்டில், கடந்த ஒரு வாரமாக, காட்டு யானை இரவில் வலம் வந்தபடி இருந்தது.

இந்த யானை, நேற்று மாலை, கன்னிமலை எஸ்டேட் அருகே ரோட்டோரம் நின்றது. இதனால், ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல், ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்றன.

யானையை காண, சுற்றுலா பயணியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சிறிது நேரத்திற்குப் பின், சில வாகனங்கள் யானையை கடந்து சென்றன. அவற்றை, யானை பின் தொடர்ந்து விரட்டியது. இருசக்கர வாகனத்தில் வந்த, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர், கீழே விழுந்து காயமடைந்தார்.

சிலர் ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று, 'செல்ஃபி' எடுத்தனர். நீண்ட நேரத்திற்குப் பின், யானை காட்டுக்குள் சென்றதும், வாகன போக்குவரத்து சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...