கோவையில் உயிரிழந்த புள்ளிமானை கூறுகளாக பிரித்த 5 பெண்கள் உட்பட 6 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை!

கோவை வனசரகம், ஜம்புகண்டி என்ற இடத்தில் இறந்த புள்ளிமானை 6 கூறுகளாக பிரித்த 5 பெண்கள் உட்பட 6 தொழிலாளர்களுக்கு மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் உயிரிழந்த புள்ளிமானை ஆறு கூறுகளாக பிரித்த 5 பெண்கள் உட்பட 6 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், கோபிநாரி பிரிவு ஆனைக்கட்டி அருகே உள்ள ஜம்புகண்டி என்ற இடத்தில் உள்ள பட்டா நிலத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஆண் புள்ளிமானை நாய் துறத்தியதில், அங்கிருந்த முள் கம்பி வேலியில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. பின்னர், அந்த மானை நாய் கடித்து கொன்றதாக தெரிகிறது.

அப்போது, அங்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த ஆனைக்கட்டியை சேர்ந்த முருகன் (48), சிவகாமி (38), சாந்தி (37), வள்ளி (29), சிந்து (28), சிவகாமி (48) ஆகிய 6 பேரும் நாயை துரத்தி விட்டு, புள்ளிமானை இழுத்து மறைவான இடத்தில் வைத்து ஆறு கூறுகளாக பிரித்துள்ளனர்.

இதனிடையே, மான் இறந்த தகவல் அறிந்து அங்கு வந்த கோபிநாரி பிரிவு வனவர் மதுசூதனன், வனக்காப்பாளர் குமார், அண்ணாமலை, வனக்காவலர் முருகன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், அப்பகுதியில் மான் இறைச்சியை கூறு போட்ட 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து, அந்த மான் இறைச்சி மற்றும் தலை ஆகியவை வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில் ஆறு பேர் மீது தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...