தமிழக மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து ஓ.பி.எஸ் கவலைப்பட வேண்டாம் - கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு..!

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 24 இடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஓ.பி.எஸ் கவலைப்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



கோவை: பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளிலேயே போடும் வகையில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.



தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஹீமோபிலியோ நாள் நிகழ்வு, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்திற்கும், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்திற்கும், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.



அப்போது பேசிய அவர், ஹீமோபிலீயாவை நோய் என கருத வேண்டாம் எனவும் முன்னோர்களிடம் இருந்து வந்த அசவுகரியம் என நினைத்தால் போதுமானது எனவும் ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஒருவருக்குப் பாதிப்பு என்றாலும் சிகிச்சை அளிக்க அரசு முழு முயற்சி எடுக்கும் எனவும் அரசு உங்களுடன் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

வீடுகளுக்கே எடுத்துச் சென்று ஹீமோபிலியா மருந்துகளை வழங்க வேண்டும் என நிகழ்வில் ஒருவர் கோரிக்கை விடுத்த நிலையில், மேடையில் பேசிய அவர் 29ம் தேதி நடைபெறும் மானியக்கோரிக்கையின் போது ஹிமோபிலியாவிற்கான மருந்துகள் அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.



அடுத்த மாத துவக்கத்திலிருந்து தமிழகத்தில் 42 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஹீமோபிலியா மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர், இந்தியாவிலேயே அதிக மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு எனவும் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருந்தாலும், பல்வேறு நோய்களுக்கான சிறப்புச் சிகிச்சைகள் கோவையில் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்தார்.



மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பான திட்டம் எனவும் இத்திட்டம் துவங்கிய ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் 61,18,911 பேருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் இதுவரை 49,949 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாகவும் 41 கோடி ரூபாய் இதுவரை அரசு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தால் 30 முதல் 40 சதவீதம் வரை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 100 சதவீதம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது எனவும் மத்திய அரசுதான் 812 இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் ஆனால் விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் 24 இடங்களை மத்திய அரசு நிரப்பவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி இடங்களை நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனும் அழுத்தம் கொடுத்துள்ளார் எனவும் கூறிய அவர், நாடு முழுவதும் 300 இடங்கள் நிரப்ப நடவடிக்கை என சொல்லியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதாகவும் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கவலை கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் இந்தியாவில் தற்போது 7 வகை வைரஸ்கள் நிலுவையில் உள்ளது எனவும் அரசு எடுத்த நடவடிக்கையால் கடந்த 21 நாட்களாக உயிரிழப்பு இல்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் 92.38 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 77.28 சதவீதம் 2வது தவணை தடுப்பூசியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனக்கூறிய அவர் தமிழ்நாட்டைப் பொருத்தவரை மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தை நாட்டிலேயே தமிழக அரசு தான் சொந்தமாக வைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பிற நாடுகள் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் முகக்கவசம் போட விலக்கு அளிக்கப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு மக்கள் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் பெட்டகம் வழங்குவதில் கடந்த ஆட்சியில் குளறுபடி ஏற்பட்டது எனவும் குழு அமைத்து அதை ஆய்வு செய்து வருவதாகவும் விடுபட்டவர்களுக்கு மாவட்டம் வாரியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 355 ஒன்றியங்களில் இல்லம் தேடி மருத்துவம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், கோவையில் 159 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என மத்திய அரசு தான் அறிவித்துள்ளதாகவும், முன்கள பணியாளர்கள் நீங்கலாகப் பிறருக்கும் தடுப்பூசி பூஸ்டர்களை இலவசமாகச் செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...