இந்தியாவில் தற்போது 7-வகை வைரஸ்கள் நிலுவையில் உள்ளது எனவும் அரசு எடுத்த நடவடிக்கையால் கடந்த 21-நாட்களாக உயிரிழப்பு இல்லை என தெரிவித்தார்.
கோவை: கோவை அரசு மருத்துவ மனையில் ஹீமோபீலியா தின விழா மற்றும் வால்பாறை, உடுமலைப்பேட்டை, கோபிச்செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் புதிய கூடுதல் அரசு மருத்துவமனை கட்டிட அடிக்கல் நாட்டு விழாவை, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
தமிழகத்தில் 100-சதவீதம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. மத்திய அரசுதான் 812-இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால் விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் 24-இடங்களை மத்திய அரசு நிரப்பவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி இடங்களை நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனும் அழுத்தம் கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் 300-இடங்கள் நிரப்ப நடவடிக்கை என சொல்லியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கவலை கொள்ள வேண்டாம். தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது.
இந்தியாவில் தற்போது 7-வகை வைரஸ்கள் நிலுவையில் உள்ளது எனவும் அரசு எடுத்த நடவடிக்கையால் கடந்த 21-நாட்களாக உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் 92.38 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 77.28-சதவீதம் 2-வது தவணை தடுப்பூசியில் செலுத்தப்பட்டுள்ளது.
இதனால் 88-சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகியுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தை நாட்டிலேயே தமிழக அரசு தான் சொந்தமாக வைத்துள்ளது. பிற நாடுகள் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தி கொண்டு, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கப்பட வேண்டும், பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் போட விலக்கு அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு மக்கள் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.
முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் பெட்டகம் வழங்குவதில் கடந்த ஆட்சியில் குளறுபடி ஏற்பட்டது எனவும் குழு அமைத்து அதை ஆய்வு செய்து வருகிறோம் விடுபட்டவர்களுக்கு மாவட்டம் வாரியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 355-ஒன்றியங்களில் இல்லம் தேடி மருத்துவம் செயல்படுத்தப்பட்டுள்ளது கோவையில் 159-வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என மத்திய அரசு தான் அறிவித்துள்ளது. முன்கள பணியாளர்கள் நீங்கலாகப் பிறருக்கும் தடுப்பூசி பூஸ்டர்களை இலவசமாகச் செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.