கோவை அடுத்த மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வேகமாக சென்ற கார் மரத்தின் மீது மோதி விபத்து - பள்ளி மாணவர்கள் பலி….!

சுற்றுலா சென்று விட்டு வந்த போது கார் நிலை தடுமாறி மரத்தில் மோதிய விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அடுத்த மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சென்ற கார் சாலை ஓர மரத்தின் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாரதி நகர், காட்டூர், மகாதேவபுரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் முகமது தெளபீக்(16), முகமது ஆரிப்(16), முகமது இர்பான்(18), காலித்(16), அர்சத்(16). இவர்களில் முகமது தெளபீக், முகமது ஆரிப், அர்சத் உள்ளிட்ட மூவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

கார் ஓட்டிய முகமது இர்பான் கோவை தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.காம் பயின்று வருகிறார். காலித் மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர்கள் 5-பேரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, காரை கல்லூரி மாணவர் முகமது இர்பான் ஓட்டியுள்ளார்.



இந்நிலையில் கார் மேட்டுப்பாளையம் வரும் வழியில் கோத்தகிரி சாலையில் திடீரென நிலைதடுமாறி அருகே இருந்த மரத்ததின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் முகமது தெளபீக், முகமது ஆரிப் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த இரு மாணவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா சென்று விட்டு வந்த போது கார் நிலை தடுமாறி மரத்தில் மோதிய விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...