கோவை வெள்ளியங்கிரி இரண்டாவது மலையில் மயங்கி விழுந்த தஞ்சாவூர் நபர் உயிரிழப்பு…!

கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 59 வயது தொழிலாளி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய தஞ்சாவூர் மாவட்டத்தை தொழிலாளி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கரிகாலன் (50). தனியார் உணவகத்தில் பணியாற்றிய அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்காக தனது நண்பர் ராஜசேகர் என்பவருடன் கடந்த 13 ஆம் தேதி கோவை வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இருவரும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இரண்டாவது மலை ஏறும்போது கரிகாலனுக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக தெரிகிறது. அப்போது, அருகில் இருந்தவர்கள் சோதித்துப் பார்க்கும்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் வனத்துறை, மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, உயிரிழந்த கரிகாலலின் உடலை மீட்டு மலை அடிவாரதுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...