பருத்தி இறக்குமதி வரி விலக்கு: இந்தியாவில் ஜவுளித்தொழில் சிறப்பான நிலையை அடையும்: தென்னிந்திய பஞ்சாலை சங்கம் அறிவிப்பு!

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது, தமிழ் புத்தாண்டு பரிசாக கிடைத்துள்ளது என்றும், இந்தியாவில் ஜவுளித்தொழில் சிறப்பான நிலையை அடையும் என்றும் தென்னிந்திய பஞ்சாலை சங்கம் அறிவித்துள்ளது.



கோவை: தொழிற்துறையின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது, தமிழ் புத்தாண்டு பரிசாக கிடைத்துள்ளதாகவும், இந்தியாவில் ஜவுளித்தொழில் சிறப்பான நிலையை அடையும் என தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து கோவையில் தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் தலைவர் ரவி சாம், இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.



அப்போது அவர்கள் கூறியதாவது:-

தொழிற்துறையின் அவசர தேவையை கருத்தில் கொண்டு பருத்தி மீதான இறக்குமதி வரி மற்றும் செஸ் வரிகளை வரும் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்ததற்காக பிரதமர், மத்திய நிதித்துறை அமைச்சர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர், மத்திய வேளாண்துறை அமைச்சர் மற்றும் ஜவுளித் துறை இணையமைச்சர் ஆகியோருக்கும், கடிதங்கள் மூலம் பருத்தி மீதான இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திய தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோருக்கும் எங்களது நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரை பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம். இது தமிழ் புத்தாண்டு பரிசாக கிடைத்துள்ளது. இதன் மூலமாக நூற்பாலைகள், கைத்தறிகள், விசைத்தறிகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்கள் பயனடையும். இந்த ஆண்டு 340 லட்சம் பேல் தேவைப்படும் என நிர்ணயித்திருந்த நிலையில் , 45 லட்சம் பேல் குறைவாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. நடப்பு ஆண்டில் ஒரு பேல் பருத்தியின் விலை ஒரு லட்சம் வரை சென்றது. தற்போது வரி குறைப்பால் பருத்தி விலை குறைய உள்ளது. அதுவும், ரூ.85 ஆயிரம் வரை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், இந்தியாவில் பதுக்கப்பட்ட பருத்திகளும் இந்த காலகட்டத்தில் வெளிவரும். பருத்தி விலை குறைந்த அதே நேரத்தில் நூல் விலையையும் குறைக்க வேண்டும். ஒரு சில மாதங்களில் ஆயத்த ஆடைகள் விலை குறையும். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 35 லட்சம் பேல் வரை பருத்தி இறக்குமதியாகும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் பருத்தி விளைச்சலை அதிகரிக்க வேண்டும்.

தற்போது 1.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி விளைச்சல் உள்ளது. 3 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இதை இரட்டிப்பாக வேண்டும் என்பது எங்களது குறிக்கோள். இறக்குமதி செய்யப்படும் பருத்தியால் உள்ளூர் விவசாயம் பாதிக்கப்படாது. ஏனெனில் உள்ளூரில் கிடைக்கும் பருத்தியை விட இறக்குமதி செய்யும் பருத்தி விலை அதிகமாக உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதார பின்னடைவை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவிற்கு பின்னலாடை உற்பத்தி ஆர்டர்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...