கோவை மாநகராட்சியில் சாலையை சீரமைக்க வாட்ஸ் அப் மூலம் 89 புகார்கள் - 346 சதுர மீட்டர் பணிகள் நிறைவு….!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த தனியார் நிறுவனம் தங்கள் பணிகளை துவங்கியுள்ள நிலையில், இரண்டு நாட்களில் மட்டும் வாட்ஸ் அப் மூலம் 89 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, கோவை ரயில் நிலையம், பீளமேடு, ஆவாரம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 346 சதுர மீட்டர் அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் சீர் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் பிரதான சாலைகளில் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீர் செய்ய தனியார் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, *”81476-84653”* என்ற வாட்ஸ்அப் எண் ஒன்றை பொது மக்களிடம் வழங்கியுள்ளது.

இதன் மூலம், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் எங்காவது குண்டும், குழியுமான சாலைகள் இருந்தால் அதை செல்போனில் படம் பிடித்து,பழுதான சாலை உள்ள இடம் குறித்த ஜி.பி.எஸ் லோகேஷனை அனுப்பி வைத்தால், அதை அந்த உடனடியாக தனியார் நிறுவன ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு, பிரத்தியேக இயந்திரம் மூலம் “கோல்டு மிக்ஸ்” என்ற கலவையை கொண்டு சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த தனியார் நிறுவனம் தங்கள் பணிகளை துவங்கியுள்ள நிலையில், இரண்டு நாட்களில் மட்டும் வாட்ஸ் அப் மூலம் 89 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, கோவை ரயில் நிலையம், பீளமேடு, ஆவாரம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 346 சதுர மீட்டர் அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் சீர் செய்யப்பட்டுள்ளது.



புகார்கள் பெறப்பட்ட உடன் அந்த சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து, பணிக்கு ஏற்ப ஊழியர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்பி வைக்கப்படுகிறது. அதே போல், சாலை சீரமைப்பு பணிகள் முடிந்த பகுதிகளில்,நடந்து முடிந்த வேலைகள் குறித்து அரசு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

சாலைகள் சீரமைப்புக்காகபயன்படுத்தப்படும் கோல்டு மிக்ஸ் கலவைகள் தரமாக உள்ளதா? என்பது சாலைகள் சிறிது பயன்பாட்டிற்கு வந்த பிறகே தெரியவரும் என்று கூறப்பட்டு வரும் நிலையில்,வாட்ஸ் அப் புகார் மூலம் சாலைகளை சீரமைக்க முடியும் என்ற முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...