மண்‌ என்பது வற்றாத வளம்‌ அல்ல; அது நம்‌ வாழ்வின்‌ ஆதாரம்:‌ ஐ.நா சுற்றுச்சூழல்‌ அமைப்பில்‌ சத்குரு பேச்சு!

நாம்‌ உயிர்‌ வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும்‌ மண்‌ வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வுடன்‌ கூடிய நடவடிக்கைகளை அரசாங்கங்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று ஐ.நா சுற்றுச்சூழல்‌ அமைப்பின்‌ நிகழ்ச்சியில்‌ சத்குரு பேசினார்‌.


ஜெர்மனி நாட்டில்‌ உள்ள ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பின்‌ (UNCCD) தலைமை அலுவலகத்தில்‌ நடந்த நிகழ்ச்சியில்‌ அந்த அமைப்பின்‌ நிர்வாக செயலாளர்‌ இப்ராகிம்‌ தியாவ்‌ அவர்களுடன்‌ சத்குரு நேற்று முன்தினம் (ஏப்ரல்‌ 13) கலந்துரையாடினார்‌.



அப்போது அவர்‌ கூறுகையில்‌, “உலகில்‌ உள்ள பல அரசாங்கங்கள்‌ மண்ணை ஒரு செயலற்ற ஒரு பயன்பாட்டு பொருளாகவே கையாள்கின்றன. சில செயற்கை உரங்களை கூடுதலாகவோ, குறைவாகவோ பயன்படுத்தி மண்‌ வளத்தை நிர்வகித்து விட முடியும்‌ என கருதுகின்றனர்‌. இந்த அணுகுமுறையை நாம்‌ முதலில்‌ மாற்றி கொள்ள வேண்டும்‌. மண்‌ என்பது வற்றாத ஒரு பயன்பாட்டு பொருள்‌ அல்ல; அது நம்‌ வாழ்வின்‌ ஆதாரம்‌. இந்த விழிப்புணர்வுடன்‌ மண்‌ வளப்‌ பாதுகாப்பை நாம்‌ மேம்படுத்த வேண்டும்‌. நிகழ் காலத்தில்‌ நாம்‌ எதுர்‌ கொண்டு வரும்‌ பருவநிலை மாற்றம்‌, பல்லுயிர்‌ பெருக்கப்‌ பாதிப்பு மற்றும்‌ சூழலியல்‌ அழிவு போன்ற பல்வேறு முக்கிய சுற்றுச்சூழல்‌ பிரச்சினைகளுக்கு மண்‌ அழிவு தான்‌ மிக அடிப்படையான காரணம்‌. அதை சரி செய்தால்‌ மற்ற பிரச்சினைகளையும்‌ எளிதில்‌ சரி செய்துவிட முடியும்‌.” என்றார்‌.



மண்‌ அழிவை தடுப்பதற்கும்‌, இழந்த வளத்தை மீட்டெடுப்பதற்கும்‌ மனிதர்கள்‌ விழிப்புணர்வுடன்‌ செயல்பட வேண்டியது அவயம்‌ என்பதை சத்குருவும்‌, இப்ராகிம்‌ தியாவும்‌ இணைந்து வலியுறுத்தினர்‌.

மண்‌ வளத்தை பாதுகாக்க அரசாங்கங்கள்‌ உரிய சட்டங்கள்‌ இயற்ற வலியுறுத்தி சத்குரு மேற்கொண்டுள்ள 30,000 கி.மீ மோட்டார்‌ சைக்கிள்‌ பயணத்தின்‌ ஒரு பகுதியாக அவர்‌ இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டார்‌. ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பின் அலுவலகத்தில்‌ அதன்‌ நிர்வாக குழு உறுப்பினர்கள்‌ சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்‌.



வரும்‌ மே மாதம்‌ ஐ.நாவின்‌ பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பின் சார்பில்‌ ஐவரி கோஸ்ட்‌ நாட்டல்‌ நடத்தப்பட உள்ள COP15 சுற்றுச்சூழல்‌ மாநாட்டிலும்‌ சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளார்‌. இதில்‌ உலகில்‌ உள்ள 150-க்கும்‌ மேற்பட்ட நாடுகளின்‌ பிரதிநிதிகள்‌ பங்கேற்க உள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...