நீலகிரி கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு!

தற்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரன்னிமேடு வரை வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நீலகிரி மலை ரயில், 'யுனெஸ்கோ' பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

வழக்கமாக, மேட்டுப்பாளையம்-குன்னுார்-ஊட்டி இடையே தலா ஒரு முறையும், ஊட்டி-குன்னுார் இடையே, தலா நான்கு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது, கோடை சீசன் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், தெற்கு ரெயில்வே சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு செய்துள்ளது.

நேற்று, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை வந்த சிறப்பு மலைரயிலில், ரயில்வே வாரிய நிதி உறுப்பினர் நரேஷ் சலோச்சா, சேலம் கோட்ட பொது மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் கூறியதாவது: நீலகிரி மலை ரயில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரன்னிமேடு வரை வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம்-குன்னுார் இடையே, 120 நாட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக மாற்றப்பட்ட முன்பதிவு ரயில் பட்டியல், 15 நாட்களில் மாற்றம் செய்து, முன்பதிவில்லாமல், இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...