கோவை சிங்காநல்லூரில் தண்ணீர் தொட்டியை பார்க்க சென்ற மூதாட்டி சுவர் இடிந்து விழுந்து படுகாயம்..!

சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள், படுகாயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தண்ணீர் தொட்டியை பார்க்க சென்ற மூதாட்டி சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்தார்.

கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



மிகவும் பாழடைந்து காணப்படும் இந்த ஹவுசிங் யூனிட் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதன் காரணமாக அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஹவுசிங் யூனிட்டை காலி செய்த நிலையில் ஒரு சில குடும்பங்கள் மட்டும் வசித்து வருகின்றன. அதில் சுப்புலட்சுமி(63) என்பவர் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்ப்பகுதியில் குடியிருந்து கொண்டு இட்லி கடை நடத்தி வருகிறார்.

இதனிடையே நேற்று கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று அதிகாலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் அளவை பார்ப்பதற்காக மூதாட்டி சுப்புலட்சுமி வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார்.



அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், மாடியிலிருந்து சுப்புலட்சுமி கீழே போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டு கொட்டகையின் மீது விழுந்து, சிமெண்ட் சீட்டு மேற்கூரை உடைந்து இட்லி கடைக்குள் விழுந்தார்.

சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள், அதிர்ஷ்டவசமாகப் படுகாயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார். இதேபோன்று சம்பவ இடத்திற்கு விரைந்த முன்னாள் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததுடன், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...