சீரற்ற குடிநீர் விநியோகமே மக்களின் பெரும் குற்றச்சாட்டு: கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு..!

சீரற்ற குடிநீர் விநியோகமே மக்களின் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. அதற்குக் காரணம் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் நடைபெறும் அரசியலே என மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தெரிவித்தார்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சீரற்ற குடிநீர் விநியோகமே மக்களின் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. அதற்குக் காரணம் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் நடைபெறும் அரசியலே என மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கோவை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பொருள் எண் 4-யில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது; தெற்கு மண்டலம் வார்ட் எண் 86, 87, 88 க்கு உட்பட்ட பாதாளச் சாக்கடை குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் தோண்டப்பட்டுச் சேதமடைந்துள்ள தார்ச்சாலைகளை புதுப்பிக்க 4 கோடியே 37 லட்சத்தில் மதிப்பீடு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு தெரிவித்ததாவது;

தனக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தில் பெரிதும் மக்கள் முன்வைக்கும் கோரிக்கையானது குடிநீர், பாதாளச் சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பிரச்சனைகளே. தற்பொழுது சாக்கடைகள் தூர்வாரப்பட வேண்டும் என்றும் மழைநீர் வடிகால் என்று கூறப்படுகிறது ஆனால், குறைந்தளவில் பெய்யப்படும் மழைக்கே தண்ணீர் தேங்கி நின்று நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது ஆகவே, உடனடியாக மழைநீர் வடிகாலில் தூர்வாரி சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், வார்டுகளுக்கு 50 சுகாதாரப்பணியாளர்கள் இருக்கும் இடத்தில் 25 சுகாதாரப்பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆகவே இங்குச் சுகாதார பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் பணியாற்றுவது இல்லை என்றும் மேலும், நிரந்தர பணியாளர்களுக்குக் காலை 5:45 முதல் மதியம் 10:45 வரை பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என்றும் ஒப்பந்த பணியாளர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யாததே சுகாதார சீர்கேடு காரணமாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சரியாக வேலை செய்யும் பச்சத்தில் கூடுதலாக தூய்மை பணியாளர்களை நியமிக்க அவசியம் இருக்காது என்றும் தற்பொழுது மாநகராட்சியில் கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமிக்க வாய்ப்பும் இல்லை என்றும் தெரிவித்தார். தூய்மை பணிகளை மேற்கொள்ளத் தேவைப்படும் அடிப்படை பொருட்கள் கூட மாநகராட்சியின் இருந்து வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், மண்டலம் வாரியாக 5 லட்சம் என்று மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து குடிநீர் இருபத்தி ஒரு தினங்களுக்கு ஒரு முறையே தெற்கு மண்டல பகுதிகளில் விநியோகிக்கப்படுகிறது என்றும், ஐந்து நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் விநியோகம் என்பது இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தண்ணீர் விநியோகத்தில் நடக்கும் அரசியல் என்னவென்றால் மூத்த உதவிப் பொறியாளர்கள் தண்ணீர் விநியோகிக்கும் வார்டுகளில் 4-5 நாட்களுக்கு ஒரு முறையும், இளைய பொறியாளர் தண்ணீர் விநியோகிக்கும் இடங்களில் 15-20 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது என தெரிவித்தார். ஆகவே, உடனடியாக அனைத்து வார்டுகளிலும் சீரான தண்ணீர் வினியோகம் என்பது நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரதான சாலைகளை முதலில் சரி செய்ய வேண்டும் என்றும் 32, 46, 47, 83, 63 வார்டுகளில் போர்க்கால அடிப்படியில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...