கோவையில் இந்து அமைப்பின் நிர்வாகியான பிக்ஸர் பிரேம் என்பவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை உரிய நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கும், உயரதிகாரிகளுக்கும் தெரிவிக்காததால், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இந்து அமைப்பின் நிர்வாகி மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை உரிய நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கும், உயரதிகாரிகளுக்கும் தெரிவிக்காததால், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில பாரத இந்து மகாசபை அமைப்பின் மண்டல இளைஞர் அணி அமைப்பாளராக இருப்பவர் பிரேம் என்கிற பாக்சர் பிரேம். இவர் கடந்த நவம்பர் மாதம், வங்கதேசத்தில் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, மத மோதலை ஏற்படுத்தும் விதமாக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் கூறி, கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் பிரேமை கைது செய்தனர். இதையடுத்து, சில தினங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் பாக்சர் பிரேம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட வழக்கில்,, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களும், அரசின் உயர் அதிகாரிகளுக்கு, கோவை மாநகர காவல்துறை சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது.
அப்போது, காவல்துறை சார்பில் அனுப்பப்பட்ட ஆவணங்களை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வுக்கு உட்படுத்தினார். அப்போது, கோவை மாநகர காவல்துறை சார்பில் குண்டர் சட்டமானது, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி போடப்பட்டிருப்பதும், அந்த ஆவணங்களை 29ம் தேதி வரை, பிரேமுக்கும், அரசு உயரதிகாரிகளுக்கும் அனுப்பாமல் 12 நாட்களாக கிடப்பில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தை 12 நாட்களுக்கும் மேலாக அனுப்பாமல் வைத்திருந்தால், அது காலாவதியாகி விடும் என்ற விதியின் கீழும், குண்டர் சட்டம் உத்தரவு போடப்பட்டு 3 மாதன்களுக்கு பின், பிரேமை கைது செய்திருப்பது முறையான நடவடிக்கை அல்ல என்பதும் தெரியவந்ததால், அவர் மீது கோவை காவல்துறை பதிவு செய்திருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
மத மோதலை உருவாக்கும் வகையில் பேசியவர் மீது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தை போடாமல், தாமதாக தகவல் அளித்து, வழக்கை நீர்த்து போகும் வகையில் நடந்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.