கோவையில் முன்பகை காரணமாக சக கட்டட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!

இந்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5-ஆயிரம் விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பாலு இன்று தீர்ப்பு அளித்தார்.


கோவை: கோவையில் முன்பகை காரணமாக சக கட்டட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், காய்தே மில்லத் புதுவீதியில் வசித்து வந்தவர் ஷேக் அப்துல்லா (36). இவரும், திருச்சி, புங்கனுாரை சேர்ந்த தங்கப்பன்(58), என்பவரும் கோவையில் ஒன்றாக தங்கி கட்டட வேலைக்கு சென்றனர்.

காந்திபுரம், 9-வது தெருவில்வேலை செய்த போது, தங்கப்பன் மொபைல் போனை, ஷேக் அப்துல்லா உடைத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் முன் விரோதம் ஏற்பட்டு, 18–9–2021 அன்று மாலையில், ஷேக் அப்துல்லாவை கத்தியால் குத்தி தங்கப்பன் கொலை செய்தார்.

காட்டூர் போலீசார்,தங்கப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் தங்கப்பனுக்குஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி பாலு,இன்றுதீர்ப்பு அளித்தார்.

இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் லதா அவர்கள் புலன் விசாரணை அதிகாரிஎதிரியை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...