உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு, சித்திரை முதல்நாள் கொண்டாட்டம் - கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு..!

இந்த ஆண்டு எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி இறைவனை வேண்டுவது மிகுந்த மன நிம்மதியை அளிப்பதாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.



கோவை: தமிழ் புத்தாண்டு திருநாளான சித்திரை ஒன்றாம் தேதியான இன்று மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று இந்த சுபகிருது ஆண்டுசிறக்கவழிபாடு செய்து வருகின்றனர்.

காலையில் எழுந்தவுடன், மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகை, பணம், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.



அதன்படி, கோவையில் பிரசித்திபெற்ற கோவில்களான, புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் காலை முதலே சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.



அந்த வகையில், கோவை காட்டூர் பகுதியில்பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில், சித்திரை முதல் நாளான இன்று மக்கள் அனைவரும் பொருளாதார போன்ற அனைத்து வகையான கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜை நடைபெற்றது.



இதில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா நோய்த்தொற்று காரணமாக, விசேஷ நாட்களில் ஆலயங்களில் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடை இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி இறைவனை வேண்டுவது மிகுந்த மன நிம்மதியை அளிப்பதாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...