மழை பெய்ததால் சேறு மாநகராக காட்சியளிக்கும் சேரன்மாநகர் ரோடு: கோவையில் குளம் போல் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி..!

புதிய தார்சாலை அமைத்து முடிக்கும் வரை சேரன்மாநகர் செல்லும் ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.



கோவை:கோவையில் குளம் போல் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

ஹோப் காலேஜ் முதல் சேரன்மாநகர் வரை செல்லும் சேரன்மாநகர் ரோட்டில் தண்ணீர் பைப் லைன் மற்றும் காஸ் பைப்லைன் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொண்ட காரணத்தால், கடந்த பல ஆண்டுகளாக ரோடு சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

சமீபத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே மோசமாக காணப்பட்ட ரோடு, மேலும் மோசமடைந்துள்ளது. பல இடங்களில் சேறு மட்டுமே ரோட்டில் அதிகம் காணப்படுகின்றன.



இது தவிரசாலை அமைக்கும் பணிகள் காரணமாக ரோட்டில் சில இடங்களில் தண்ணீர் வடிகால் அடைக்கப்பட்டதால் இன்று பெய்த மழை காரணமாக ரோட்டின் பல்வேறு பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றன. மாநகராட்சி ஊழியர்கள் பல மணி நேரம் போராடி தண்ணீரை வெளியேற்றினர்.

புதிய தார்சாலை அமைத்து முடிக்கும் வரை சேரன்மாநகர் செல்லும் ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...