கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 41-ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது: மேலும் விலை அதிகரிக்கும் என தொழில்துறையினர் தகவல்..!

விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய்க்கு உயரும் என இத்தொழிலில் உள்ள வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


கோவை: தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது:-



தங்கத்தின் விலை உயர்வுக்கு ரஷ்யா - உக்ரேன் நாடுகளுக்கிடையே இடையே நடந்துவரும் போர் முக்கிய காரணமாகும்.

ரஷ்யா நாட்டின் கரன்சி நோட்டு மதிப்பு குறைந்துள்ளது காரணமாக, அந்நாடு தங்கத்தை மிக அதிக அளவு வாங்கி குவிக்கத் துவங்கியுள்ளது. கரன்சி மதிப்பு குறையலாம், ஆனால் தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது.

எனவே மிக அதிகமாகத் தங்கத்தை அந்த நாடு வாங்கி சேர்த்து வரும் காரணத்தால் உலக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

விலை மேலும் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 55 ஆயிரம் ரூபாய்க்கு உயரும் என இத்தொழிலில் உள்ள வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் கோவையில் தங்க நகை விற்பனை மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் சமீப நாட்களாக விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன்(8 கிராம்) தங்கத்தின் விலை பட்டியல்:

April 7: Rs 39,888

April 8: Rs 40,040

April 10: Rs 40,344

April 11: Rs 40,512

April 12: Rs 40,632

April 13: Rs 40,992

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...